ஈரோடு அருகே தென்னக காசி பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
இங்கு 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பைரவர் சிலை அமைந்துள்ளது. மூலவருக்கு பக்தர்களே பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு ஆகும்.
அதன்படி பைரவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.