கன்னியாகுமரி மாவட்டத்தில் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த முயன்ற மீனவர்களை சக மீனவர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை பாதிக்கக்கூடிய வகையில் மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தும் சுருக்குமடி வலைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க சுருக்குமடி வலையுடன் செல்ல முயன்றனர். தகவலறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலையை பயன்படுத்த முயன்ற மீனவர்களின் படகுகளையும், வலைகளையும் பறிமுதல் செய்தனர்.