பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் - கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!
Sep 14, 2026, 01:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 2, 2025, 06:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, நமீபியா, அர்ஜெண்டினா மற்றும் பிரேசில் ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி இன்றும் நாளையும் ஆப்ரிக்க நாடான கானாவில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் மூலம் முதல் முறையாக கானா செல்லும் பிரதமர் மோடி, கடந்த 30 ஆண்டுகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார்.

பின்னர் நாளை மாலை அங்கிருந்து டிரினிடாட் அண்டு டுபாகோவிற்கு செல்லும் பிரதமர் மோடி, நாளை மறுதினம் அங்குள்ள நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவிலும், ஜூலை 5 முதல் 8-ம் தேதி வரை பிரேசில் நாட்டிலும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரேசில் அதிபர் லுலா டா சில்வா அழைப்பை ஏற்று அங்கு செல்லவுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டில் நடைபெறவுள்ள 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் கலந்துகொள்ள உள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அமைதி, பாதுகாப்பு, பன்முகத்தன்மையுடன் உறவை வலுப்படுத்துதல், பொறுப்பான ஏ.ஐ தொழில்நுட்ப பயன்பாடு, உலகளாவிய சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த விவகாரங்களில் இந்தியாவின் பார்வைகளை அவர் பகிர்ந்துகொள்ள உள்ளார். உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு இருதரப்பு கூட்டங்களையும் அவர் நடத்தவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூலை 8-ம் தேதி பிரேசிலில் இருந்து தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவிற்கு செல்லும் பிரதமர் மோடி. 9-ம் தேதி அந்நாட்டு அதிபர் நந்தி தைத்வாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: GhanaTrinidadTobagoprime minister narendra modiBrazilNamibiaArgentina5 countries tour
Share
Tweet
SendShare
Previous Post

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

Next Post

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies