சேலம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வித்தகர் விநாயகர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.
திருமணி முத்தாற்றின் ஓரம் மண்ணுக்குள் புதைந்திருந்த கோவிலை பசுமை தமிழகம் அமைப்பினர் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி மீட்டெடுக்க முயன்றனர். அப்போது நான்கடி உயரம் உள்ள ஒரே பாறையில் இரண்டடி உயர விநாயகர் சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வித்தகர் விநாயகர் கோவில் ஔவையார் முக்தியடைந்த தலமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இக்கோவிலை சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூட்டம், கூட்டமாக கண்டு ரசித்து வருகின்றனர்.