இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களுடைய படகு என்ஜின், GPS, வாக்கி டாக்கி, வலை, செல்போன் உள்ளிட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை திருடி சென்றனர்.
வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த தங்கதுரை, அவரது மகன் மணிகண்ட பிரபு, கங்காதரன் உள்ளிட்டோர் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, முன்று படகுகளில் வந்த 9 பேர் கொண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள், பயங்கர ஆயுதங்களை கொண்டு மீனவர்களை தாக்கிவிட்டு 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை திருடி சென்றனர். இதில் படுகாயமடைந்த தமிழக மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.