கொல்கத்தா பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா தெரிவித்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதற்கு முரணாக கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்றும், அவரது எலும்புகள் முறியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது சடலம் அவசர கதியில் எரியூட்டப்பட்டவில்லை என்றும் அவர் முரண்பட்ட கருத்தைப் பதிவு செய்துள்ளார்.