பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
68 வயதாகும் மாயாவதி, உத்தர பிரதேச முதல்வராக நான்கு முறை பதவி வகித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியை நிறுவிய கன்ஷி ராமுக்கு பிறகு அவரது அரசியல் வாரிசாக மாயாவதி உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.