சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சாம்பாரில் பல்லி கிடந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
காரைக்குடி புதிய தலைமை மருத்துவமனை அருகே இயங்கி வரும் உணவகமொன்றில், நோயாளியின் உறவினர் ஒருவர் இட்லி பார்சல் வாங்கியுள்ளார்.
பின்னர் அதனை சாப்பிட பிரித்த போது சாம்பாரில் இறந்த நிலையில் பல்லி கிடந்துள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குளிர்சாதன பெட்டியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மசாலா மற்றும் மாமிச உணவுப் பொருட்களை கீழே கொட்டி அழித்தனர். மேலும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், உணவகத்தையும் ஐந்து நாட்களுக்கு மூட உத்தரவிட்டனர்.