உலகளவில் அதிக பயனர்களைக் கொண்ட “எக்ஸ்” சமூக தளம் இன்று காலை ஒரு சில மணி நேரம் திடீரென செயலிழந்தது.
இதனால் பாதிப்படைந்த இந்திய மற்றும் அமெரிக்க பயனாளர்கள், தங்கள் புகார்களைப், பிரபல ரிப்போர்ட்டிங் தளமான ‘டவுன்டெக்டரில்’ பகிர்ந்துள்ளனர்.
இந்த பிரச்னையை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் சந்தித்துள்ளதாகவும், ஒரு சிலருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் எக்ஸ் தளம் முடங்கியதற்கான காரணம் குறித்து இன்னும் எந்த வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.