தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காய்கறி சந்தையில் வரத்து அதிகரிப்பின் காரணமாக தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து விற்பனையானது.
பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான பெத்தநாடார்பட்டி, மகிழ்வண்ணநாதபுரம், ஆலங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டிருந்தனர்.
இதனால் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தைக்கு விற்பனைக்காக தக்காளி அதிகளவில் கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து கடந்த வாரம் வரை கிலோ 20 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி தற்போது 8 ரூபாய் வரை மட்டுமே விற்பனையானது. இதன் காரணமாக கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.