நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 53 கோடிக்கும் அதிகமான மக்கள் வங்கிக் கணக்கு தொடங்கி இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், பிரதமர் மோடி பொறுப்பேற்ற பின், அனைத்து மக்களிடமும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு “ஜன் தன் யோஜனா” திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளில் 53 கோடிக்கும் அதிகமான மக்கள் வங்கிக் கணக்கு தொடங்கியிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வளர்ச்சிக்கான பாதையை உருவாக்குவதாகவும் பதிவிட்டுள்ளார்.