ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருந்து ASL பாதுகாப்பாக அதிகரித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மோகன் பகவத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும், பாஜக ஆட்சியில்லாத மாநிலங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக எழுந்த புகாரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, ASL பாதுகாப்பு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.