குஜராத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. அந்த வகையில், ஜாம்நகரில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மாடிகளில் தஞ்சமடைந்தனர். தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள், நிவாரண முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். குடியிருப்பு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.
இதேபோல ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் பெய்த கனமழையால் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், கட்டடம் பலத்த சேதமடைந்தது.