ஜார்க்கண்ட் நலன் கருதியே பாஜகவில் சேரவுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டதால், சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்தார்.
பின்னர், சிறையிலிருந்து ஜாமீனில் வந்த ஹேமந்த் சோரன், மீண்டும் முதலமைச்சரானதால் அதிருப்தியடைந்த சம்பாய் சோரன், வரும் 30-ஆம் தேதி பாஜகவில் இணையவுள்ளார்.