ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய 6 ஆயிரத்து 456 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் கூடுதலாக 300 கிலோமீட்டர் தூரத்துக்கு இருப்பு பாதை அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.