பஞ்சாப்பில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை அடுத்த ஆற்காட்டன் குடிசை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 26ஆம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு ராஜேஷின் உடலுக்கு சென்னையை சேர்ந்த ராணுவ வீரர்கள் குழுவினர் மலர் வளையம் வைத்தும், தேசிய கொடி போத்தியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தேசியக்கொடி அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ராணுவ வீரர் ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.