தமிழகத்தில் வரத்துக் குறைவின் காரணமாக பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வட மாநிலங்களில் நிலவிய கடும் வெயில், கனமழை போன்ற காரணங்களால் பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கான பூண்டு வரத்து வெகுவாக குறைந்ததால், கடந்த ஒரு வாரத்தில் பூண்டு விலை கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்துள்ளது.
அதன்படி கடந்த வாரம் 220 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ பூண்டு, தற்போது கிலோ 350 ரூபாய் வரை விற்பனையாகிறது. அடுத்த பதினைந்து நாட்களில் பூண்டின் விலை 450 ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளதாக சேலம் செவ்வாய்ப்பேட்டை வியாபாரிகள் தெரிவித்தனர்.