புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலையத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் ஷாலினி சிங் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி மாநிலத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குனராக ஷாலினி சிங் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து காவல் நிலையங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக வில்லியனூர் காவல் நிலையத்தை பார்வையிட வருகை தந்த அவரை சட்டம், ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
இதனையடுத்து பொதுமக்கள் அளிக்கின்ற புகாரின் மீது வெளிப்படைத்தன்மையாக விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் ஷாலினி சிங் உத்தரவிட்டார்.