ஜம்மு- காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் ஷீந்தரா நிலை அருகே ஆறு சீன கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
டச்சி வன சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ராணுவ வீரர்கள் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சீன கையெறி குண்டுகள் சிக்கின.
ஏற்கெனவே அருணாசல பிரதேச எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் வெடித்த நிலையில், கையெறி குண்டுகள் சிக்கியிருப்பது விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.