தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!
Oct 17, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 3, 2026, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் எதிரொலியாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பழனி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.

கொடைக்கானல் நகரின் முக்கிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. நட்சத்திர ஏரி, நாயுடுபுரம், அட்டுவம்பட்டி போன்ற பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை எதிரொலியாக சாலைகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியுற்றனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் எதிரொலியாக கழிவு நீர் வாய்க்கால் நிரம்பி சாலைகளில் மழைநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அவதியுற்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. பெத்தநாயக்கன்பாளையம், ஓலப்பாடி, கொட்டவாடி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.

Tags: raintamilnadu rainrain updateweather updatechennai metrological department
Share
Tweet
SendShare
Previous Post

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

Next Post

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies