தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்றுக் கொண்டார்.
தமிழக டிஜிபியாக பணிபுரிந்த சங்கர் ஜிவால் கடந்தாண்டு ஆகஸ்டில் ஓய்வு பெற்ற நிலையில், அப்போதைய திமுக அரசு, புதிய டிஜிபியை நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தியது. தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தலின்போது வெங்கடராமன் மாற்றப்பட்டு சந்தீப்ராய் ரத்தோரை டிஜிபியாக தேர்தல் ஆணையம் நியமித்தது.
இதனிடையே, டெல்லியில் நடந்த மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரிய கூட்டத்தில் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். கோப்புகளில் கையெழுத்திட்டு பதவியேற்று கொண்ட அவருக்கு காவல் அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
















