பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா - சிறப்பு தொகுப்பு!
Sep 9, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 19, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்தியா மாபெரும் மூன்று திட்டங்களை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்…..

சர்வதேச அரங்கில் எப்போதும் மனிதாபிமானத்திற்கும் அமைதிக்கும் இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் தொடுத்தப் போரின் காரணமாக பாலஸ்தீனத்தின் மருத்துவக் கட்டமைப்பு முற்றிலும் நிலைகுலைந்துள்ளது.

மிகவும் நெருக்கடியான இந்தச் சூழலில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியா மீண்டும் நட்புக்கரத்தை நீட்டியுள்ளது. பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் இந்தியா மாபெரும் மூன்று திட்டங்களை அறிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் (Brussels) நடைபெற்ற பாலஸ்தீன நன்கொடையாளர் குழு கூட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இத்திட்டங்களை அறிவித்தார்.

2017-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின் அடிப்படையில்,
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகரில் பிரம்மாண்டமான சிறப்பு மருத்துவமனையை அமைக்க இந்தியா உறுதியளித்துள்ளது.

காசா மீதான தொடர் தாக்குதலில், சுமார் 5,000 முதல் 6,000 பாலஸ்தீனர்கள் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில், அங்கு செயற்கை உறுப்பு பொருத்தும் மையம் நிறுவப்படும் எனவும் இந்தியா அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் மறுவாழ்வு பெற உள்ளனர்.

இஸ்ரேல் போரால் காசாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ள நிலையில்,
பாலஸ்தீன இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தியா ஒரு தொலைநோக்குத் திட்டத்தை வகுத்துள்ளது. அங்குள்ள இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் வழங்கும் நோக்குடன் ‘தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தை இந்தியா அமைக்கவுள்ளது.

தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா கொண்டுள்ள உலகளாவிய நிபுணத்துவத்தைக் கொண்டு, பாலஸ்தீன இளைஞர்களுக்குப் பல்வேறு வேலைவாய்ப்புத் திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இது தவிர, பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணி முகமைக்கு இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிப்பதாக இந்தியா அண்மையில் உறுதியளித்தது.

இந்த மனிதாபிமான திட்டங்களை இந்தியாவிற்கான பாலஸ்தீனத் தூதர் அப்துல்லா எம்.அபு ஷாவேஷ் வரவேற்றுள்ளார். காசாவின் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதிலும் பொருளாதாரத்தை மீட்பதிலும் இந்திய அரசு அறிவித்துள்ள திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பாராட்டியுள்ளார்.

போர்ச் சூழலில் ஆயுதங்களை வழங்காமல், பாலஸ்தீன மக்களின் வாழ்வை மீட்டெடுக்கும் மிகப்பெரிய திட்டங்களை அறிவித்திருப்பது உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

Tags: External Affairs Minister S JaishankarPalestine's healthcare infrastructure.Ad Hoc Liaison CommitteeBrusselsIndiaPalestinianbelgium
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

Next Post

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

Related News

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் ; 3 அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies