சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் பாருக்கு மது பாட்டில்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவை சிறைபிடித்து மதுபிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ரயிலடி தெரு பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடை, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் அதனை அகற்ற பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் பாருக்கு கொண்டு செல்ல, ஆட்டோவில் மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மதுபிரியர்கள் ஆட்டோவை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.