தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த நிலையில் சிறிதளவு மட்டுமே நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், மலைப்பகுதியில் பலத்த மழை பெய்யதது. இதனால் நீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து அருவி கரைக்கு யாரும் செல்லாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீண்டும் தண்ணீர் வரத்து சீரானதும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.