மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காட்டில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
திருவாலங்காடு கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 24-ஆம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் திருவாவடுதுறையை சேர்ந்த கர்ணன் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து சிகிச்சையில் இருந்த லட்சுமணன் என்பவர் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த குமார் என்ற மேலும் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.