விருதுநகர் அருகே நலத்திட்ட திறப்பு விழாவுக்கு வந்த திமுக எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர் சீனிவாசனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சின்ன பேராளி கிராமத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், சுமார் 28 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.
இதனை விருதுநகர் திமுக எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர் சீனிவாசன் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்க சென்றார். அப்போது எம்எல்ஏ சாலை அமைக்காதது குறித்து திமுக எம்எல்ஏ சீனிவாசனை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.