10 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய விண்வெளி பொருளாதாரம்!
Aug 17, 2025, 10:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய விண்வெளி பொருளாதாரம்!

Web Desk by Web Desk
Aug 29, 2024, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது . விண்வெளித் துறையில் ஒரு அமெரிக்க டாலர் முதலீடு செய்தால் 3 அமெரிக்க டாலரை இஸ்ரோ சம்பாதித்து கொடுக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

விண்வெளி ஆய்வு என்பது எப்போதும் ஒரு விலையுயர்ந்த விஷயமாகத் தான் இருக்கிறது. செலவைக் குறைக்க குறைக்க தவிர்க்க முடியாத பேரழிப்புகளுக்கு வழிவகுக்கும் ஒரு வணிகமாகத் தான் விண்வெளித் துறை உள்ளது.

முதலாவது இந்திய தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, “இந்திய விண்வெளித் திட்டத்தின் சமூகப் பொருளாதார தாக்க பகுப்பாய்வு” என்ற அறிக்கையை இஸ்ரோவால் நியமிக்கப்பட்ட Econ One மற்றும் Euroconsult ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையில் தான், செலவழிக்கும் ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும், இந்தியாவின் விண்வெளித் துறை தேசியப் பொருளாதாரத்துக்கு 2.54 அமெரிக்க டாலரை லாபமாக திரும்ப தருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரனுக்கு இரண்டு பயணங்கள், செவ்வாய்க்கு ஒரு பயணம் ,சூரியனுக்கு ஒரு பயணம் ,சுக்கிரனுக்கு ஒரு பயணம், ககன்யான் திட்டம், விண்வெளி சார்ந்த சிறிய பல சோதனைகள் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பான திட்டங்கள் என எல்லா திட்டங்களிலும் குறைந்த செலவு நிறைந்த லாபம் என்று இஸ்ரோ கடந்த 10 ஆண்டுகளில் வெற்றிகளைக் குவித்து வருகிறது.

உதாரணத்துக்குச் சொல்லவேண்டும் என்றால், மாட் டாமன் நடித்த ரிட்லி ஸ்காட்டின் தி மார்ஷியன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தயாரிப்பு செலவு , சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். ஆனால் அதற்கும் குறைவாக வெறும் 74 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்தியா மங்கள்யான் என்ற உண்மையான ஆர்பிட்டர் விண்கலத்தைச் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி சாதனை படைத்தது. இது, இதே பணிக்கு நாசா செலவழித்த பணத்தை விட 10 மடங்கு குறைவானதாகும்.

மேலும், இஸ்ரோ தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 55 ஆண்டுகளில் செய்யப்பட்ட மொத்த முதலீடானது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஒராண்டு பட்ஜெட்டை விட மிகக் குறைவு என்பது ஆச்சரியமான உண்மை.

கடந்த 10 ஆண்டுகளில் இஸ்ரோ, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 பில்லியன்அமெரிக்க டாலர் பங்களிப்பை அளித்துள்ளதாகவும், 4.7 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதாகவும் அந்த தேசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பத்தாண்டுகளுக்கு முன் 3.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்திய விண்வெளித்துறையின் மதிப்பிடப்பட்ட வருவாய் இப்போது 6.3 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்திருக்கிறது.

தினமும் எட்டு லட்சம் மீனவர்களுக்கு உதவுவதோடு, செயற்கைக்கோள் அடிப்படையிலான வானிலை முன்னறிவிப்புகள் மூலம் சுமார் 1.4 பில்லியன் இந்தியர்கள் பலன் பெற இஸ்ரோ வழிகாட்டுகிறது.

இந்தியா 97 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியதும், 432 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியதும் இஸ்ரோவின் சமீபத்திய சாதனையாகும்.

மேலும் விண்வெளியில் Low Earth Orbit இல் 22 செயற்கைக்கோள்களும் மற்றும் Geo-synchronous Earth Orbit- இல் 29 செயற்கைக்கோள்களும் இஸ்ரோவால் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

தங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்பும் தனியார் வீரர்களை அங்கீகரிக்கவும், ஒழுங்குபடுத்தவும், இன்-ஸ்பேஸ் எனப்படும் வேகமான மற்றும் எளிமையான அமைப்பை இஸ்ரோ அமைத்துள்ளது. இதன் மூலம் சுமார் 400 தனியார் நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் இஸ்ரோவுக்காக பணியாற்றி வருகின்றன. அவற்றில், 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதிநவீன ராக்கெட்டுகளை உருவாக்கி வருகின்றன.

Tags: Space explorationRemove term: India's space economy India's space economy increaseISROIndia's space economy
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு – பிரதமர் மோடிக்கு அழைப்பு!

Next Post

கூடலூரில் குடியிருப்பு பகுதி அருகே உலா வரும் ஒற்றை காட்டு யானை – பொதுமக்கள் அச்சம்!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies