பாகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்லாமாபாத் நகரில் அக்டோபர் 15 மற்றும் 16ஆம் தேதிகளிட்ல ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அலுவல செய்தி தொடர்பாளர் மும்தாஸ் சாரா பாலோக் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு உறுப்பு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதை பல நாடுகள் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டன. எந்தெந்த நாடுகள் கலந்து கொள்கின்றன என்பது பற்றிய தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என மும்தாஸ் சாரா பாலோக் தெரிவித்தார்.