நீலகிரி மாவட்டம் கூடலூரில், குடியிருப்பு பகுதிகள் அருகே உலா வரும் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் நிரந்தமாக விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தோட்டமூலா, கோத்தர் வயில், ஏழு மரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வரும் மக்னா என்ற காட்டு யானை, தென்னை மற்றும் பாக்கு மரங்களை சேதப்படுத்திய பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. குடியிருப்பு பகுதிக்குள் மக்னா காட்டு யானை அடிக்கடி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.