பெண்களுக்கு பணியிடங்களில் நிலவும் பாலியல் தொல்லை குறித்து புகாரளித்த ஷீ-பாக்ஸ் என்ற ஒருங்கிணைந்த இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
இந்த இணையதள சேவையை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், பாலியல் தொல்லை குறித்து பெண்கள் தங்கள் புகார்களை ஷீ-பாக்ஸ் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவித்தார். பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பான சூழல் நிலவ இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.