புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை காரணமாக நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில் தேவையான படுக்கை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.