தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை மதகுகளில் பழுதடைந்த ஷட்டர்களை சீரமைக்கும் பணியை நீர்வளத்துறையினர் துவங்கினர்.
தூத்துக்குடியின் பிரதான நீர் ஆதாரமாக விளங்கிவரும் ஸ்ரீவைகுண்டம் அணையின் மதகுகள் கனமழையின் காரணமாக சேதமடைந்தது. மதகுகளில் உள்ள இரண்டு ஷட்டர்களில் ஓட்டை விழுந்ததால் தண்ணீர் வீணாகி கடலில் கலந்தது.
எனவே, அணையில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பழுதடைந்துள்ள ஷட்டர்களை சீரமைக்கும் பணிகளை நீர்வளத் துறையினர் துவங்கினர்