சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 % வரி - கனடா முடிவு!
May 19, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 % வரி – கனடா முடிவு!

Web Desk by Web Desk
Aug 30, 2024, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும், சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீத வரி விதிக்க தீர்மானித்துள்ளது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்துக்கு அரசு கூடுதலாக 25 சதவீத வரியை விதிக்கும் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார். அது பற்றிய செய்தி தொகுப்பு.

உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக சீனா இருக்கிறது. சர்வதேச மின்சார வாகன சந்தையில் சீனாவே முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனாவில் மின்சார வாகனத் தயாரிப்புக்கு அரசு மானியங்கள் அதிக அளவில் கிடைப்பதால் பிற நாடுகள் மின்சார வாகன உற்பத்தியில் சீனாவை முந்த முடியவில்லை .

மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவில் மோதலையும் சீனா கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன மின் வாகனங்களுக்கான வரியை 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கு 36.3 சதவீதம் வரை வரி விதித்தது.

கனடாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு இன்னும் வரவில்லை என்றாலும் ஓரிரண்டு சீன நிறுவனங்களின் மின்சார வாகனங்கள் சந்தைக்குள் நுழைய ஆரம்பித்திருக்கின்றன. தற்போது கனடா சந்தையில் சீனத் தயாரிப்பான டெஸ்லாவின் மின்சார வாகனம் மட்டுமே உள்ளது .

இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம், கனடாவின் நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மின்சார வாகன உற்பத்தித் துறையில் சீனாவின் வர்த்தக நடைமுறைகள் நியாயமற்ற முறையில் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனனுடனான சந்திப்புக்குப் பிறகு, சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீத வரி விதிக்க தீர்மானித்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார்.

மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு அரசு கூடுதலாக 25 சதவீத வரியை விதிக்கும் என்றும் அறிவித்திருக்கிறார். இந்த புதிய வரிகள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது

மின்சார வாகனத் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இருக்க கனடா முயற்சித்து வருகிறது. அதன் காரணமாகவே சீன மின்சார வாகனங்களுக்கு கனடா அதிக வரி விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

கனடாவில் உள்ள சீன தூதரகத்தின் அறிக்கை, கனடாவின் இரண்டாவது பெரிய வர்த்தக நாடு சீனா என்றும், இந்த வரி விதிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவைப் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இது, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறி சீனா மீது கனடா நடத்தும் வர்த்தகப் போர் என்று விமர்சனம் செய்துள்ளது. இந்த புதிய கட்டணங்களால் குறிப்பாக பாதிக்கப்படும் டெஸ்லா நிறுவனம் ஐரோப்பாவில் செய்தது போல், விதிவிலக்குகளுக்காக கனடா அரசாங்கத்தை வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பலன் கிடைக்காவிட்டால், டெஸ்லா தனது கனடிய இறக்குமதிகளை அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் உள்ள அதன் தொழிற்சாலைகளுக்கு மாற்றலாம்.

டெஸ்லாவின் ஆறாவது பெரிய சந்தை கனடா ஆகும். கனடா அரசின் முடிவு சீனாவின் ஷாங்காயில் மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் டெஸ்லாவுக்குத் தான் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரத்யேக விதிவிலக்குகளுக்காக கனடா அரசை டெஸ்லா வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: chinaCanada100 percent tax on imports of electric vehiclesCanadian Prime Minister Justin Trudeau
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கையில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், இடைத்தரகர் கைது!

Next Post

உத்தர பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலை சிக்கியது!

Related News

மக்கள் கொண்டாடும் ரியல் ஹீரோ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹைதராபாத் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு!

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு!

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

சிந்து-விலும் தனி நாடு கோரி போராட்டம்-கலங்கும் பாகிஸ்தான்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் : தமிழிசை சௌந்தரராஜன்

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

பாகிஸ்தான் அரசுக்கு செக் வைத்த IMF : 11 நிபந்தனைகள் விதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies