ஹெராயின்,கொகைன் போன்ற போதைப்பொருட்களின் புழக்கம் தமிழகத்தில் அதிகளவில் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தபின் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், முத்ரா திட்டத்தின்கீழ் கடனுதவி பெற்றவர்களில் அதிகமானோர் பெண்கள் என தெரிவித்தார். வேலைக்காக காத்திருக்காமல் தங்களுக்கான வாய்ப்புகளை பெண்கள் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். போதைப்பொருள் பயன்பாடு தனிநபர் மட்டுமல்லாது ஒரு சமூகத்தையே சிதைத்துவிடும் என்றும் ஆளுநர் ரவி கூறினார்.