தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் தினந்தோறும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் நோயாளிகளுக்கான கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரமின்றி கழிவறைகள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள நோயாளிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.