கூட்டுறவு சங்க தேர்தல் விரைவில் நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை ஆம்புலன்ஸ் வாகனம் தொடக்க நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெரிய கருப்பன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கூட்டுறவு தேர்தலை நடத்த தனி ஆணையம் உள்ளது என்றும் அவர்கள் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். விரைவில் தமிழக முழுவதும் கூட்டுறவு தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்த பிறகு கால்நடை துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் பெரியகருப்பன் தெரிவித்தார்.