சென்னை ஃபார்முலா - 4 கார் பந்தய பாதையில் மறைமுக மது விளம்பரங்களை அகற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
Sep 18, 2025, 04:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை ஃபார்முலா – 4 கார் பந்தய பாதையில் மறைமுக மது விளம்பரங்களை அகற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Aug 31, 2024, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஃபார்முலா -4 கார் பந்தயப் பாதையில் மறைமுக மது விளம்பரங்களை அகற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தொடங்கியுள்ள ஃபார்முலா -4 கார் பந்தயப் பாதையான தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் பார்வையில் பளிச்சென்று படும் வகையில் கிங்பிஷர் எனப்படும் மதுவகையின் விளம்பரங்கள் மிக அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. . இத்தகைய விளம்பரங்கள் பார்வையாளர்களின் மனதில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்; அந்த வகை மதுவை அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். மது வகைகளுக்கு செய்யப்படும் இந்த மது விளம்பரமும், அதை கார் பந்தயத்தை நடத்தும் அமைப்பும், தமிழக அரசும் அனுமதித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.

மதுபானங்கள் , புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் விளம்பரங்களை நேரடியாக செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதனால், மது மற்றும் புகையிலை நிறுவனங்கள் மறைமுகமாக விளம்பரங்களைத் திணிக்கின்றன.

ஒரு மதுபானம் என்ன பெயரில் விற்பனை செய்யப்படுகிறதோ, அதே பெயரில் குடிநீர், சோடா, சர்க்கரை ஆகிய பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்து அவற்றின் பெயரில் மது விளம்பரங்களை செய்கின்றன. ஆனால், மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின்’Guidelines for Prevention of Misleading Advertisements and Endorsements for Misleading Advertisements, 2022′ எனப்படும் விதிகளின்படி மது விளம்பரங்களை மறைமுகமாகவும் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சோடா விளம்பரம் என்ற பெயரில் மது விளம்பரங்களையும், சிடி-க்கள், பான்மசாலாக்கள் பெயரில் புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருக்கிறது.

மறைமுக மது விளம்பரங்களுக்கு எதிராக இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், இவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு, பல்லாயிரக்கணக்கானோர்  பார்வையாளர்களாக பங்கேற்கும் ஒரு விளையாட்டுப் போட்டியில் மறைமுகமாக மது விளம்பரங்கள் செய்யப்படுவதையும், அதை தடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் அனுமதிக்க முடியாது.

கடந்த காலங்களில் மட்டைப் பந்து போட்டிகளின் போது மறைமுகமாக மது மற்றும் புகையிலை விளம்பரங்கள் செய்யப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் சுட்டிக்காட்டி தடுத்திருக்கின்றன. இப்போதும் அதே அக்கறையுடன் தான் மது விளம்பரங்களை சுட்டிக் காட்டுகிறேன். பொது நலன் கருதியும், மக்களைக் காக்கும் கடமையை நிறைவேற்றும் வகையிலும் ஃபார்முலா -4 கார் பந்தயப் பாதையில் வைக்கப்பட்டுள்ள மறைமுக மது விளம்பரங்களை உடனடியாக அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Chennaianbumani ramadossFormula 4 car raceliquor adsliquors posters
ShareTweetSendShare
Previous Post

கோவை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த ஜோடியை கடத்தி சென்ற குடும்பத்தினர் – விரட்டிப் பிடித்த போலீசார்!

Related News

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, பட்டியலின – பழங்குடியினர் ஆணையம் உத்தரவு!

ஜமைகா : பெருவெள்ளத்தால் நீரில் மூழ்கிய வாகனங்கள்!

மயிலாடுதுறையில் பட்டியலின இளைஞர் படுகொலை!

விளையாட்டாக தூக்கில் தொங்கிய இளைஞர் உயிரிழப்பு!

பிரதமர் மோடிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபட்ட சரத்குமார்!

நாட்றம்பள்ளி – ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி என்ற குர்குரே வில் செத்து போன எலி!

Load More

அண்மைச் செய்திகள்

சூர்யகுமார் யாதவை தவறாக பேசிய முகமது யூசுப் – இந்திய மக்கள் கண்டனம்!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு – சிசிடிவி காட்சி!

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படம்!

சேலம் : கஞ்சா போதையில் காவல் நிலையத்தில் போலீசாரிடம் தகராறு!

சேலம் : பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இலவச ஆட்டோ பயண சேவை தொடங்கி வைப்பு!

சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies