ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மாட்டு ராஜா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த மாதம் 5ம் தேதி மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 28 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி மாட்டு ராஜா என்பவரை தனிப்படை போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர். இவருடைய நெருங்கிய நண்பரான புதூர் அப்பு என்பவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக கூறப்படும் நிலையில் அவரின் பெயர் கைது செய்யப்பட்ட ரவுடி மாட்டு ராஜா கையில் பச்சை குத்தியிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.