காசாவில் தற்காலிக போர் நிறுத்ததிற்கு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா முனை ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஹமாஸ் அமைப்பும் பதிலடி கொடுத்து வருகிறது.
இரு தரப்புக்கும் இடையே, நீடித்து வரும் சண்டையில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் காசாவில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு போலியோ தொற்றுக் கண்டறியப்பட்டதால் அவர்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் 3 நாட்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.