அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டென் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா மேத்யூ எப்டென் இணை முதல் சுற்றில் களமிறங்கியது.
இதில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் நெதர்லாந்து இணையை போபண்ணா இணை தோற்கடித்தனர். இதன் மூலம் ரோகன் போபண்ணா ஜோடி 2-ம் சுற்றுக்கு முன்னேறியது.