மதுரையில் ஜல்லிக்கட்டு காளை ரத்த காயங்களுடன் சுற்றித் திரிவது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேரு நகரில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் சுற்றித் திரிகிறது. காளை மீது கொதிக்கும் ரசாயன திரவம் ஊற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து கால்நடை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.