விஜய் நடித்த கோட் படத்தின் 4வது பாடல் இன்று வெளியானது
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், கோட் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘தி கோட்’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த தினம் கொண்டாடப்படும் நிலையில் கோட் படத்தின் 4-வது பாடல் வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதிய matta என்ற பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.