ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பதிலாக 5-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் 1-இல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், அன்றைய தினம் அசோஜ் மாத அமாவாசை கொண்டாடப்படுவதால், வாக்குப் பதிவை ஒத்திவைக்க வேண்டுமென பிஸ்னோய் சமூகத்தினர் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைப் பரிசீலித்த தலைமைத் தேர்தல் ஆணையம், ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் 1-லிருந்து 5-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில், ஹரியானா மற்றும் ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், அக்டோபர் 4-க்கு பதிலாக 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.