ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் மொகல்ராஜபுரம் கிராமத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது . இதில் வீட்டில் இருந்த பேர் மண்ணுக்கு சிக்கி புதையுண்டனர். தகவலறிந்து வருவாய்த்துறையினருடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே குண்டூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது. அதில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர்.