தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டிற்கு 2 முறை கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது.
இதில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண சேவைகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏற்கனவே இருக்கும் கட்டணத்தை விட கூடுதலாக 5 முதல் 150 ரூபாய் வரை வாகன ஓட்டிகள் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும்.