செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கில் தமிழக அரசு செய்துவரும் காலதாமதத்தை விசாரித்து அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்ற வழக்கு தாக்கல் செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.