செங்கல்பட்டில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார்.
அந்த வகையில், சான்பிரான்சிஸ்கோ நகரில் மின்பொருள் மற்றும் கனரக தொழிற்சாலைகளுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்தித்தார்.
இதனைதொடர்ந்து செங்கல்பட்டில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலை அமைப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
எலக்ட்ரோலைசர்கள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.