வாடிக்கையாளகளுக்கு வாகன கடன் சேவைகளை அளிப்பதற்காக யூனியன் வங்கியுடன் TOYOTA நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து TOYOTA நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யூனியன் வங்கியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் கீழ், சொந்த பயன்பாட்டுக்காக TOYOTA நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் வாகனங்களின் மொத்த விலையில் 90 சதவீதத்தை வங்கி கடனாக வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முன்கூட்டியே கடனை முழுமையாக அளித்தல், பகுதி பகுதியாக தவணைகள் கட்டுதல் போன்றவற்றுக்கு விதிக்கப்படும் கட்டணங்களில் இருந்து வாடிக்கையாளருக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.