பக்கவாதத்தால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - காரணம் என்ன?
Oct 28, 2025, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பக்கவாதத்தால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – காரணம் என்ன?

Web Desk by Web Desk
Sep 1, 2024, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இளம்வயதினர் அதிகளவில் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

இதயத் துடிப்பில் ஏற்படும் குறைபாடுகளால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு உடல் உறுப்புகளின் செயற்பாடுகள் தடைப்படுவதே ஸ்ட்ரோக் எனப்படுகிறது.

இரத்த உறைவு மற்றும் இரத்த கசிவு என இரண்டு வகையான ஸ்ட்ரோக் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

2023ம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உடன் இணைந்து Lancet journal லான்செட் ஜர்னல் நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தரும் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஆய்வறிக்கை, 2050ம் ஆண்டுக்குள் இந்தியா உட்பட வளரும் நாடுகளில் சுமார் ஒரு கோடி பேர் ஸ்ட்ரோக் எனப்படும் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கிறது.

தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்தியாவில்தான் அதிக பக்கவாத நோயாளிகள் உள்ளனர். இந்தியாவில் இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணமாகவும் இந்த ஸ்ட்ரோக் இருக்கிறது. மேலும் உடல் உறுப்புக்கள் செயலிழப்புக்கும் இயலாமைக்கும் ஆறாவது முக்கிய காரணமாகவும்  ஸ்ட்ரோக் உள்ளது.

2022ம் ஆண்டு Boehringer Ingelheim India என்ற மருந்து நிறுவனத்தால், இந்தியாவில் உள்ள 12 முக்கிய நகரங்களில் 4,742 இந்தியர்களிடம் ஆன்லைன் சர்வே நடத்தப் பட்டது.

அதில், நான்கு இந்தியர்களில் ஒருவருக்குக் கீழ் பக்கவாதம் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியும் என்றும், அவர்களில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர் என்றும் தெரிய வந்திருக்கிறது.

ஸ்ட்ரோக்குக்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தும், முறையான மருத்துவ சிகிச்சை எடுக்காவிட்டால், அடுத்த முறை ஸ்ட்ரோக் வந்தால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஸ்ட்ரோக் ஏற்பட்டு 4 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சென்றாலும் கூட மூளையில் இரத்த கசிவு இல்லை என்றால் தான் முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நவீன மயமான மருத்துவ வளர்ச்சி , சிறந்த சிகிச்சை முறைகள் இருந்தாலும் கூட , ஸ்ட்ரோக் வராமல் தற்காத்து கொள்வதே எப்போதும் ஆரோக்கிய வாழ்வுக்கு வழியாகும்.

ஸ்ட்ரோக் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றால், எளிமையான உடற்பயிற்சி, நல்ல உணவு முறைகள், ஆரோக்கியமான உறவுகள் மற்றும் மன அமைதி ஆகிய நான்கும் முக்கியம் என்கிறார்கள்.

மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஊட்டச் சத்துக்களை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பதும் மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.

Tags: Indiastrokeblood flowdefects in the heartbeathemorrhagic
ShareTweetSendShare
Previous Post

பாலியல் குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் – மலையாள நடிகர் ஜெயசூர்யா

Next Post

தெலங்கானாவில் வெள்ளத்தில் சிக்கிய அரசுப்பேருந்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

Related News

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

Load More

அண்மைச் செய்திகள்

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

உலகின் ஆபத்தான சாலை பெங்களூரு நகரத்தில் தான் இருக்கிறது – வீடியோ வெளியிட்ட இணையவாசி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies