தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி கனமழை காரணமாக நிரம்பியதையடுத்து உபரிநீர் வெளியேற்றபட்டது. இந்நிலையில் ஏரிக்கு அருகே சாலையில் 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து வெள்ளத்தில் சிக்கியது.
இதுகுறித்து பேருந்தில் இருந்த பயணிகள் தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் அனைத்து பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.